TNPSC Thervupettagam

ஷரம் சக்தி தளம்

January 28 , 2021 1651 days 698 0
  • மத்தியப் பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சகமானது ஷரம் சக்தி எனப்படும் ஒரு தேசிய புலம்பெயர் உதவித் தளத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது புலம்பெயர் தொழிலாளர்களுக்காக வேண்டி மாநில மற்றும் தேசிய அளவிலான திட்டங்களின் சுமூகமான அமலாக்கத்திற்கு திறனுள்ள வகையில் உதவ இருக்கின்றது.
  • பழங்குடியின புலம்பெயர்ந்தோர் குறித்த மாநில அளவிலான தரவை மைய அளவில் இணைக்கும் வகையில் மத்தியப் பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சகம் செயல்படுவது இதுவே முதன்முறையாகும்.
  • இது அவர்களின் எண்ணிக்கைக்காக மட்டும் அல்லாமல் அவர்களை அந்தத் திட்டங்களுடன் இணைப்பதற்காகவும் அறியப்படுகின்றது.
  • கோவா ஆனது தனது புதிய புலம்பெயர்வுப் பிரிவின் மூலம் தரவுச் சேகரிப்பு குறித்த துறைச் சோதனையில் முன்னணியில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்