ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் மன்றக் கூட்டம்
November 5 , 2019 2102 days 805 0
உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (Shanghai Cooperation Organisation - SCO) நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் மன்றத்தின் 18வது கூட்டத்தில் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடியின் சிறப்புத் தூதராக அவர் பிரதிநிதித்துவப் படுத்தினார்.
இந்தக் கூட்டத்தின் போது, 2020 ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின்அரசாங்கத் தலைவர்கள் மன்றத்தின் அடுத்த கூட்டம் இந்தியாவில் நடத்தப் பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த உச்சி மாநாட்டின் போது ரஷ்யாவால் நடத்தப்பட்ட SCO கூட்டு இராணுவப் பயிற்சியான “CENTER 2019” என்ற இராணுவப் பயிற்சியானது கௌரவப்படுத்தப் பட்டது.
SCO ஆனது எட்டு முழு உறுப்பினர் நாடுகளையும் ஆறு "கலந்துரையாடல் நாடுகளையும்" மற்றும் நான்கு "பார்வையாளர் நாடுகளையும்" கொண்டுள்ளது.