ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் அமைதிப் பயற்சி - 2018
August 14 , 2018 2690 days 852 0
ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் அமைதிப் பயிற்சி 2018 ரஷ்யாவின் மத்திய இராணுவ ஆணையத்தால் ரஷ்யாவின் செலியாபின்ஸ்க்கின் செபர்குல்லில் ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 29 வரை நடத்தப்படவிருக்கிறது.
SCO (Shanghai Cooperation Organisation) அமைதிப் பயிற்சி நடவடிக்கையானது ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது.
இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை SCO உறுப்பு நாடுகளால் நடத்தப்படுகிறது.
இந்தியா ஜூன் 2017ல் SCOன் முழுநேர உறுப்பினர் ஆன பின்பு இப்பயிற்சியில் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும்.
இந்தப் பயிற்சியானது SCO சாசனத்தின் கீழ் உத்திமுறையிலான நடவடிக்கைகளையும், சர்வதேச கிளர்ச்சி எதிர்ப்பு அல்லது பயங்கரவாத சூழல் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது.