ஜப்பானிய தற்காப்பு விமானப்படை மற்றும் (Japanese Air Self Defence Force -JASDF) இந்திய விமானப்படை (Indian Air Force - IAF) ஆகியவற்றிற்கிடையேயான முதலாவது இருதரப்பு விமானப்படைப் பயிற்சியான ‘ஷின்யூ மைத்ரி - 18‘ ஆக்ராவில் உள்ள விமானப்படை நிலையத்தில் தொடங்கியது.
இந்த பயிற்சியின் கருத்துரு: “போக்குவரத்து விமானத்தில் இணைந்து இயங்குதல் / மனிதாபிமான உதவி & பேரிடர் நிவாரணம்” (Joint Mobility/Humanitarian Assistance & Disaster Relief (HADR) on Transport aircraft) என்பதாகும்.