ஷி ஜின்பிங்கிற்கும் மோடிக்கும் இடையிலான இரண்டாவது அதிகாரப் பூர்வமற்ற சந்திப்பு
October 15 , 2019 2120 days 848 0
ஷி ஜின்பிங்கிற்கும் மோடிக்கும் இடையிலான இரண்டாவது அதிகாரப் பூர்வமற்ற சந்திப்பானது மாமல்லபுரத்தில் நடத்தப் பட்டது.
இந்தச் சந்திப்பின் போது விரிவான பிராந்தியப் பொருளாதாரக் கூட்டுறவு (Regional Comprehensive Economic Partnership - RCEP) குறித்து இந்தியா தனது கவலைகளைக் கூறியதாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளரான விஜய் கோகலே கூறினார்.
RCEP என்பது சீனா தலைமையில் முன்மொழியப்பட்டுள்ள ஒரு தடையில்லா வர்த்தக ஒப்பந்தமாகும்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் 53 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகப் பற்றாக்குறை குறித்தும் இங்கு விவாதிக்கப் பட்டது.
சீன துணைப் பிரதமரான ஹு சுன்ஹுவா மற்றும் இந்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையே இது குறித்து விவாதிப்பதற்கு வழிமுறை ஒன்று நிறுவப் பட்டுள்ளது.
இந்த சென்னைச் சந்திப்பை இரு நாடுகளுக்கும் இடையிலான “ஒத்துழைப்பின் புதிய சகாப்தம்” என்று மோடி பாராட்டியுள்ளார்.
இரு தலைவர்களுக்கிடையில் இது போன்ற ஒரு முதலாவது அதிகாரப் பூர்வமற்ற சந்திப்பானது 2018 ஆம் ஆண்டில் சீனாவின் வுஹானில் நடத்தப் பட்டது.
நேபாளத்தில்
சென்னைச் சந்திப்பைத் தொடர்ந்து, ஷி ஜின்பிங்அடுத்ததாக நேபாளத்திற்கும் பயணம் செய்தார். 1996 ஆம் ஆண்டிற்குப் பிறகு சீன அதிபர் ஒருவர் நேபாளத்திற்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
சீனாவின் லாசா மற்றும் நேபாளத்தின் காத்மாண்டு ஆகிய நகரங்களுக்கு இடையே ரயில் இணைப்பு ஒன்று முன்மொழியப் பட்டுள்ளது.
டிரான்ஸ்-இமயமலை இணைப்பானது புத்தரின் பிறப்பிடமான லும்பினியுடனும் இணைக்கப்பட இருக்கின்றது.
எவரெஸ்ட் சிகரத்தின் மீண்டும் அளவிடப்பட்ட உயரத்தை அறிவிக்க நேபாளமும் சீனாவும் கூட்டாக ஒப்புக் கொண்டுள்ளன.