TNPSC Thervupettagam

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

November 19 , 2025 2 days 38 0
  • வங்காளதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஆனது முன்னாள் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
  • முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமன் கான் கமல் மற்றும் முன்னாள் காவல்துறைத் தலைவர் சௌத்ரி அப்துல்லா அல்-மாமுன் ஆகியோரும் இதே குற்றச் சாட்டுகளில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டனர்.
  • நீதிபதி முகமது கோலம் மோர்டுசா மஜும்தர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட தீர்ப்பாயம் இந்தத் தீர்ப்பினை வழங்கியது.
  • ஹசீனா, கமல் மற்றும் மாமுன் ஆகியோர் மீது கொலை, கொலை முயற்சி, சித்திரவதை மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள் உட்பட ஐந்து குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டது.
  • ஹசீனா மற்றும் கமல் ஆகியோர் தப்பியோடியவர்களாக அறிவிக்கப்பட்டு, அவர்கள் ஆஜராகாத நிலையில் விசாரணை நடைபெற்றது.
  • தீவிரமடைந்து வரும் அமைதியின்மை காரணமாக, 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 04 ஆம் தேதியன்று ஹசீனா வங்காளதேசத்திலிருந்து தப்பிச் சென்றார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்