ஸ்கார்பியன் (தேள்) மீன் – ஸ்கார்பியனோஸ்ப்சிஸ் நெக்லெக்டா
June 2 , 2020 1897 days 798 0
மத்தியக் கடல் மீன் ஆராய்ச்சி மையத்தை (CMFRI - Central Marine Fisheries Research Institute) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மன்னார் வளைகுடாவில் ஓர் அரிய மீன் இனத்தைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த மீன் இனமானது CMFRI மையத்தின் தேசியக் கடல்சார் பல்லுயிர்ப் பெருக்க அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளது.
CMFRI மையம் என்பது கேரளாவின் கொச்சியில் தலைமையகத்தைக் கொண்ட ஒரு முன்னணி வெப்பமண்டல கடல்சார் மீன்கள் ஆராய்ச்சி மையமாகும்.
இந்த மீன் இனமானது தனது நச்சுத் தன்மையுடைய வாலிற்காக உள்ளூரில் ஸ்கார்பியன் மீன் என அழைக்கப் படுகின்றது.
இந்தியக் கடல் பகுதியில் இந்த வகை மீன் இனம் உயிருடன் காணப்படுவது இதுவே முதல்முறையாகும்.