ஸ்கைட்ராக்ஸ் உலக விமான நிறுவன விருதுகள் ஆனது, "விமானப் போக்குவரத்துத் துறையின் ஆஸ்கார் விருதுகள்" என்று பரவலாகக் கருதப்படுகின்றன.
2025 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த மற்றும் குறைந்த கட்டணத்திலான விமான சேவை நிறுவனங்களில் இந்தியாவின் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் பிராந்திய ரீதியாக, 2025 ஆம் ஆண்டிற்கான தெற்காசியாவின் சிறந்த விமான நிறுவனம் மற்றும் மிகவும் குறைந்த அளவு கட்டணத்திலான ஒரு விமான நிறுவனம் ஆகியவற்றுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கத்தார் ஏர்வேஸ் நிறுவனமானது 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் சிறந்த ஒரு விமான நிறுவனமாக அறிவிக்கப் பட்டதோடு ஒன்பதாவது முறையாக மீண்டும் இந்தப் பட்டத்தைப் பெற்றுள்ளது.