₹10,000 கோடி நிதியுடன் ஸ்டார்ட்அப் இந்தியா நிதியங்களுக்கான நிதி (FoF) 2.0 திட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது.
இது மூலதனத்தைத் திரட்டுவதையும், குறிப்பாக தனியார் முதலீடு குறைவாக உள்ள துறைகளில் உள்ள புத்தொழில் நிறுவனங்களை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 2016 ஆம் ஆண்டு ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கான நிதியங்களுக்கான நிதி (FFS) 1.0 இன் அடிப்படையில் உருவாக்கப் பட்டுள்ளது.
இந்த நிதியானது இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (SEBI) பதிவு செய்யப்பட்ட மாற்று முதலீட்டு நிதிகளில் (AIFs) முதலீடு செய்யப்படும்.
இத்திட்டத்தை இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி (SIDBI) செயல்படுத்தும்.
இது அதிநவீன தொழில்நுட்பம், ஆரம்ப கட்டப் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புதுமையான உற்பத்தித் துறைகளில் முக்கிய கவனம் செலுத்துகிறது.