தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து ‘ஸ்டார்ட்அப் இந்தியா புத்தாக்க வாரம்’ என்ற பெயரில் ஒரு வார அளவிலான கொண்டாட்டங்களை காணொலி வாயிலாக நடத்துவதற்கு முடிவு செய்துள்ளன.
இது இந்தியா முழுவதும் தொழில்முனைவின் பரவலையும் ஈடுபாடுகளையும் காட்சிப் படுத்தும்.
இந்தக் காணொலி நிகழ்வானது 2022 ஆம் ஆண்டு ஜனவரி 10 முதல் ஜனவரி 16 வரை நடத்தப்பட உள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்ததின் 75வது ஆண்டிற்கான கொண்டாட்டமான ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்ற ஒரு நிகழ்வினை நினைவு கூறும் வகையிலும் இந்த நிகழ்ச்சியானது நடத்தப் படுகிறது.