ஸ்டார்ஸ் (STARS - Strengthening Teaching-Learning and Results for States Program) என்பது “மாநிலங்களுக்கான கற்பித்தல் – கற்றல் மற்றும் முடிவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு திட்டம்” என்பதைக் குறிக்கிறது.
இதன்கீழ், உலக வங்கிக் குழுமமானது 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனுதவியை அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், ராஜஸ்தான், ஒடிசா, கேரளா, மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்கள் இதன் பயனைப் பெற இருக்கின்றன.
இது 10 மில்லியன் ஆசிரியர்கள் மற்றும் 250 மில்லியன் பள்ளிக் குழந்தைகளுக்குப் பயனளிக்க இருக்கின்றது.