இது சில நெருக்கடி மிக்கப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஒரு தளத்தை மாணவர்களுக்கு வழங்குவதற்கான நாடு தழுவிய ஒரு முயற்சியாகும்.
இந்த ஆண்டு, ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் - இளையோர் முன்னெடுப்பானது பள்ளி மாணவர்களுக்கான முன்னோடித் திட்டமாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் (SIH) 2017 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
இது கல்வி அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி சபை, பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான உள்ளடக்கப் புத்தாக்க மையம் (i4C) ஆகியவற்றின் முன்னெடுப்பாகும்.
2022 ஆம் ஆண்டு ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியின் இறுதிப் போட்டியில் IGNOU மாணவர்களின் குழு முதல் பரிசை வென்றது.