ஸ்ரீசைலம் புலிகள் வளங்காப்பகத்தில் இந்தியக் காட்டெருது
July 8 , 2024 444 days 334 0
ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் மாவட்டத்தில் உள்ள நல்லமலை வனப்பகுதியின் அத்மகூர் பகுதியில் இந்தியக் காட்டெருது (போஸ் கௌரஸ்) கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் காட்டில் முன்னொரு காலத்தில் இந்தியக் காட்டெருது (தெலுங்கு மொழியில் அடவி துன்னா) காணப்பட்டது என்பதோடு இது விசித்திரமாக நீண்ட காலமாக அந்தப் பகுதியில் தென்படாமல் இருந்தது.
இந்தியக் காட்டெருது ஆனது கடைசியாக 1870 ஆம் ஆண்டுகளில் இங்கு கண்டறியப் பட்டது எனவே இது 150 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தென்பட்டுள்ளது.
இந்தியக் காட்டெருது என்றும் அழைக்கப்படும் கௌர், தெற்காசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட மிகப் பெரிய மாடு இனமாகும்.
நாகார்ஜுனசாகர்-ஸ்ரீசைலம் புலிகள் வளங்காப்பகமானது இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் வளங்காப்பகமாகும்.