மத்திய வான்வழிப் போக்குவரத்து அமைச்சகமானது ஸ்ரீநகர் விமான நிலையத்தினை 2008 ஆம் ஆண்டு விமான நிலையப் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தின் கீழ் ஒரு முக்கிய விமான நிலையமாக அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானச் சேவைகளை வழங்குவதற்கான மேம்பாட்டுக் கட்டணம் மற்றும் பயணிகள் சேவை கட்டணம் உள்ளிட்ட கட்டண வரிகளை நிர்ணயிக்க விமான நிலையப் பொருளாதார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு வழி வகை செய்யும்.
ஒரு விமான நிலையத்தின் வருடாந்திரப் பயணிகள் போக்குவரத்தானது ஒரு குறிப்பிட்ட அளவைக் கடந்தால், மத்திய அரசானது அந்த விமான நிலையத்தை ஒரு முக்கிய (பெரு) விமான நிலையமாக அறிவிக்கிறது.
இதற்கு முன்பு, ஸ்ரீநகர் விமான நிலையத்தின் போக்குவரத்தினை இந்திய விமான நிலைய ஆணையம் தீர்மானிக்கும்.
இந்திய விமான நிலைய ஆணையம் வான்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனம் ஆகும்.