TNPSC Thervupettagam

ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில்

July 15 , 2020 1775 days 683 0
  • கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின் நிர்வாகத்தை நடத்த திருவாங்கூர் அரசர் குடும்பத்திற்கான உரிமையை இந்திய உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
  • இது நாட்டின் செல்வமிக்க கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
  • இக்கோயிலானது “நிலவறைகள்” என்று அழைக்கப்படும் 6 பெட்டகங்களைக் கொண்டுள்ளது.
  • இவை A முதல் F என்ற அடையாளத்தில் குறிக்கப்பட்டுள்ளன.
  • 2011 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில், இந்திய உச்ச நீதிமன்றமானது இக்கோயிலின் “B” என்ற பெட்டகத்தைத் தவிர மற்ற 5 பெட்டகங்களையும் திறப்பதற்கு வேண்டி தொல்லியல் துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது.
  • இந்த 6 பெட்டகங்களில் “B” என்ற பெட்டகமானது மிகப்பெரிய ஒரு பெட்டகமாகக் கருதப் படுகின்றது.
  • ஆனால் “B” என்ற பெட்டகத்தைத் திறந்தால் துரதிர்ஷ்டம் ஏற்பட்டு விடும் என்ற நம்பிக்கையின் காரணமாக இந்தப் பெட்டகமானது திறக்கப் படாமல் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்