TNPSC Thervupettagam

ஸ்வச் சௌசலாய் – கரிமமாய் பவிஷ்ய பிரச்சாரம் 2026

November 27 , 2026 16 hrs 0 min 34 0
  • ஜல் சக்தி அமைச்சகம் உலகக் கழிப்பறை தினத்தன்று (2026 ஆம் ஆண்டு நவம்பர் 19) ஸ்வச் சௌசலாய் – கரிமமாய் பவிஷ்ய (SSGB) பிரச்சாரத்தைத் தொடங்கியது.
  • கிராமப்புற வீடுகள், சமூக மற்றும் பொதுக் கழிப்பறைகளை மேம்படுத்துவதற்காகத் தூய்மை பாரதத் திட்டத்தின் (கிராமப்புறம்) கீழ் இந்த நாடு தழுவிய பிரச்சாரம் செயல்படுத்தப்படுகிறது.
  • கழிப்பறை பழுதுபார்ப்பு, ஒற்றைக் குழி கழிப்பறைகளை இரட்டைக் குழி அமைப்புகளாக மாற்றுதல், உறிஞ்சு குழி அமைத்தல் மற்றும் பாதுகாப்பான கழிவுநீர் கசடு மேலாண்மை ஆகியவற்றில் இது கவனம் செலுத்துகிறது.
  • பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தி, கழிப்பறை பராமரிப்பு, கைகழுவுதல், தனிநபர் சுகாதாரம் மற்றும் நான்கு வகை கழிவுப் பிரிப்பு ஆகியவற்றை இது ஊக்குவிக்கிறது.
  • இதில் டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் சுகாதாரத் தணிக்கைகள் அடங்கும், மேலும் நிலுவையில் உள்ள தூய்மை சேவை மதிப்பீடுகளை (Swachh Seva Aankalan) 2026 ஆம் ஆண்டு நவம்பர் 30-க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்