ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தில் நிலையான மற்றும் பொறுப்பு மிக்கச் சுற்றுலாத் தளங்களாக உருவாக்கப் படுவதற்காக 15 மாநிலங்களில் இருந்து 30 நகரங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன.
இந்த 15 மாநிலங்களில் மத்தியப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவையும் அடங்கும்.
ஸ்வதேஷ் தர்ஷன் என்ற திட்டமானது, கருத்துரு அடிப்படையிலான சுற்றுலா வட்டாரங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்காக 2014-15 ஆம் ஆண்டில் மத்திய அரசினால் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், சுற்றுலா உள்கட்டமைப்பினை மேம்படுத்தச் செய்வதற்காக மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு சுற்றுலா அமைச்சகம் நிதி உதவி வழங்குகிறது.
ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 திட்டமானது, உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், ஒரு நேரத்தில் ஒரு தளத்தில் ஈடுபாடு செலுத்துவதை இலக்காகக் கொண்டு, கருத்தாக்கப் பட்டது.