வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமானது, ‘ஸ்வாநிதி சே சம்ரித்தி’ என்ற திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் 14 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் கூடுதலாக 126 நகரங்களில் இத்திட்டமானது தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டமானது, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கானத் தெருவோர வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்குச் சமூகப் பாதுகாப்புப் பலன்களை வெற்றிகரமாக வழங்கச் செய்து அவர்களுக்கு ஏற்படும் வாழ்வாதாரம் சார்ந்த அபாயங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது.