TNPSC Thervupettagam

ஸ்விஃப்ட் விண்கல மீட்புப் பணி

August 25 , 2026 16 hrs 0 min 40 0
  • மீட்பு விண்கலமான லிங்க் (LINK) கட்டுப்பாட்டுச் சமிக்ஞைகளைச் சந்தித்ததையடுத்து, நீல் கெஹ்ரெல்ஸ் ஸ்விஃப்ட் ஆய்வகத்தை மீட்கும் முயற்சியை நாசா கைவிட்டது.
  • கேட்டலிஸ்ட் ஸ்பேஸ் (Katalyst Space) உருவாக்கிய லிங்க் மீட்பு விண்கலம், குறைந்து வரும் ஸ்விஃப்ட்டின் சுற்றுப்பாதையை உயர்த்துவதற்காக 2026 ஆம் ஆண்டு ஜூலை 3 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
  • லிங்க்கின் சில எதிர்வினைச் சக்கரங்கள் பழுதடைந்ததால் அது கட்டுப்பாட்டை இழந்து சுழலத் தொடங்கியது; உந்துவிசைகள் மூலம் அதனை நிலைநிறுத்த எடுக்கப் பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.
  • 2004 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்விஃப்ட், காமா கதிர் வெடிப்புகள் மற்றும் பிற அதிக ஆற்றல் கொண்ட பிரபஞ்ச நிகழ்வுகளை ஆய்வு செய்கிறது.
  • சுற்றுப்பாதை உயர்த்தப்படாவிட்டால், 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஸ்விஃப்ட் மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்