ஸ்விகி மற்றும் சொமேட்டோ நிறுவனங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி
January 4 , 2022 1236 days 514 0
உணவு விநியோக நிறுவனங்களை ஸ்விகி மற்றும் சொமேட்டோ ஆகிய நிறுவனங்கள் 5% வரியினை வசூலித்து செலுத்த வேண்டும்.
மேலும் ஊபர் மற்றும் ஓலா போன்ற கார் சேவை நிறுவனங்கள், ஜனவரி 01 முதல் முன்பதிவாகும் 2 மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கு 5% என்ற அளவில் சரக்கு மற்றும் சேவை வரியினை வசூலிக்க வேண்டும்.
மேலும் காலணி விற்பனை நிறுவனங்கள் விலை சாராமல் அனைத்திற்கும் 12% அளவில் வரியை விதிக்க வேண்டும்.
தற்போது சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் பதிவு செய்துள்ள உணவகங்கள் அந்த வரியினை வசூலித்து செலுத்தி வருகின்றன.