ஹம்பியைச் சுற்றியுள்ள கட்டுமானத்தை இடித்தல் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
February 14 , 2020 1975 days 651 0
உலகப் பாரம்பரிய தளமான ஹம்பியைச் சுற்றியுள்ள வணிகக் கட்டிடங்களை இடித்தல் தொடர்பான கர்நாடக அரசு அதிகாரிகளின் முடிவை உச்ச நீதிமன்றம் உறுதிப் படுத்தியுள்ளது.
1961 ஆம் ஆண்டின் மைசூர் பண்டைய வரலாற்று நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் சட்டத்தை மீறுவதாக இந்தக் கட்டுமானங்கள் இருந்தன.
இந்தப் பாரம்பரிய தளம் அமைந்துள்ள விருப்பபுரா காடி என்ற கிராமம் முழுவதும் 1988 ஆம் ஆண்டு தீர்ப்பில் ஒரு பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
ஹம்பி
இது இடைக்கால இந்தியாவின் மிகப்பெரிய பேரரசுகளில் ஒன்றான 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசின் தலைநகரமாகக் கருதப்படுகின்றது.
இது யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உலகப் பாரம்பரிய தளமாகும்.
ஹம்பியில் உள்ள வித்தலா கோயிலானது விஜயநகர பாணியின் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
ராமாயணத்தில் உள்ள ‘கிஷ்கிந்தா காண்டத்தில்’ ஹம்பியைப் பற்றியக் குறிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
இது துங்கபத்திரா நதிக்கு அருகில் அமைந்துள்ளது.
கி. பி 1500 ஆம் ஆண்டு வாக்கில், ஹம்பி - விஜயநகர அரசானது பெய்ஜிங்கிற்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய இடைக்கால நகரமாக, அதே நேரத்தில் இந்தியாவின் பணக்கார அரசாகவும் விளங்கியது.