TNPSC Thervupettagam

ஹரப்பா நாகரிகத்தின் வீழ்ச்சி

August 2 , 2026 9 days 109 0
  • பீர்பால் சாஹ்னி தொல்லுயிர் அறிவியல் நிறுவனம் (BSIP) நடத்திய ஆய்வில், தற்போதைய காலகட்டத்திற்கு முன்பு (BP) சுமார் 4,200 ஆண்டுகளுக்கு முன்பு பலவீனமான இந்திய கோடைக்காலப் பருவமழை (ISM) ஹரப்பா நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பங்களித்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  • கடந்தகால தாவரங்கள் மற்றும் பருவநிலை மாற்றங்களை மறுகட்டமைக்க, கர்வால் இமயமலையில் உள்ள தியோரியா தால் ஏரியிலிருந்து மகரந்தப் பதிவுகளை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர்.
  • 4.2 ka நிகழ்வு (4,200 ஆண்டுகளுக்கு முந்தைய பருவநிலை மாற்றம்) ஆனது குளிர்ந்த மற்றும் வறண்டப் பருவநிலையை ஏற்படுத்தியதாகவும், பருவமழையை பலவீனப் படுத்தியதாகவும், சிந்து மற்றும் கக்கர்-ஹக்ரா நதிப் பகுதிகளில் விவசாயத்தை பாதித்ததாகவும் ஆய்வு கண்டறிந்துள்ளது.
  • நதி வெள்ளம் மற்றும் நீர் இருப்பு குறைந்ததன் காரணமாக, ஹரப்பா மக்கள் கிழக்கு கங்கை சமவெளிகளை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர்.
  • இந்த பருவநிலை மாற்றம், 'வெப்பமண்டலங்களுக்கிடையிலான ஒருங்கு மண்டலம்' (ITCZ), 'எல் நினோ' (El Niño) மற்றும் 'இந்தியப் பெருங்கடல் இருமுனை' (IOD) ஆகியவற்றின் மாற்றங்கள் போன்ற காரணிகளுடன் தொடர்புடையது என ஆய்வு இணைக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்