இந்தப் பிரச்சாரமானது மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் முழுவதும் கோவிட் 19 தடுப்பூசி வழங்கீட்டின் வேகம் மற்றும் அதன் பரவலை விரைவு படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது ‘திட்டம் சார் செயல்முறையில்’ செயல்படுத்தப்படும்.
தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் தடுப்பூசி வழங்குவதன் மூலம் முழு அளவிலான கோவிட் 19 தடுப்பூசிப் பரவல் என்ற இலக்கை நோக்கி நகர்வதற்கான ஒரு தீவிரமான உந்துதலை அளிக்குமாறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசம் ஆகியவற்றிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.