1855 ஆம் ஆண்டு சந்தால் கிளர்ச்சியைக் கௌரவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 30 ஆம் தேதியன்று ஹல் திவாஸ் அனுசரிக்கப்படுகிறது.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பழங்குடியினத் தலைவர்கள் சித்து மற்றும் கன்ஹு முர்மு தலைமையில் இந்தக் கிளர்ச்சி நடைபெற்றது.
இன்றைய ஜார்க்கண்டில் உள்ள போக்னாதி கிராமத்தினைச் சேர்ந்த சந்தாலர்கள் கிளர்ந்தெழுந்தனர்.
இந்த ஒரு எழுச்சிக்கு சித்து மற்றும் கன்ஹுவின் சகோதர சகோதரிகளின் ஆதரவும் இருந்தது என்பதோடு இந்தக் கிளர்ச்சியில் அவர்களும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.
1832 ஆம் ஆண்டில் சந்தாலர் பழங்குடியினருக்கு ஆங்கிலேயர்களால் நிலம் வழங்கப் படும் என்று ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்டது ஆனால் ஜமீன்தார்கள் மற்றும் கடன் கொடுப்பவர்களால் அவர்கள் பெரும் சுரண்டலை எதிர்கொண்டனர்.
காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான பழங்குடியினரின் ஒரு போராட்டத்தையும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் பங்கையும் இந்த ஹல் திவாஸ் கௌரவிக்கிறது.