ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு தமிழக அரசு நிதி
October 28 , 2017 2935 days 1167 0
அமெரிக்க வாழ் தமிழ் ஆர்வலர்கள் இருவரின் முயற்சியால், பெருமை மிகு ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையவுள்ளது. அதற்காக தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இப்பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென ஓர் இருக்கை அமைவது இந்தியாவின் வரலாறு, மொழிகள் மற்றும் இலக்கியம், தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் கலாச்சரம் தொடர்பான ஆய்விற்கு பெரிதும் உதவுவதாகும்.
இருதய சிகிச்சை வல்லுனர் திரு.விஜய் ஜானகிராமன் மற்றும் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் திரு. S.T. சம்பந்தம் ஆகிய இருவரும் இதற்கான கருத்துருவை உருவாக்கி, நிதியும் திரட்டிவந்தனர்.