TNPSC Thervupettagam

ஹாலி வால் நட்சத்திரத்தைப் பற்றிய முதல் இந்தியக் கல்வெட்டு குறிப்பு

June 24 , 2025 10 days 83 0
  • ஹாலி வால் நட்சத்திரத்தைப் பற்றிய முற்கால இந்தியக் கல்வெட்டு குறிப்பு ஆனது, ஆந்திரப் பிரதேசத்தில் கண்டறியப்பட்ட கி.பி. 1456 காலத்தினைச் சேர்ந்த ஸ்ரீசைலம் செப்புத் தகடு சாசனத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இந்தக் கல்வெட்டு ஆனது, சமஸ்கிருதம் மற்றும் நாகரி எழுத்து வடிவங்களில் உள்ளது.
  • இது விஜயநகர மன்னர் மல்லிகார்ஜுனனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது.
  • இது ஹாலியின் வால் நட்சத்திரத்தின் தோற்றத்தையும் அதன் விளைவாக ஏற்பட்ட ஒரு விண்கல் பொழிவு குறித்தத் தகவலையும் கொண்டுள்ளது.
  • கி.பி 1456 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி திங்கட்கிழமையன்று, வால் நட்சத்திரம் மற்றும் விண்கல் பொழிவினால் ஏற்பட்ட ஒரு பேரழிவைத் தணிக்க ஒரு மத மானியம் வழங்கப் பட்டதாக இந்த சாசனம் கூறுகிறது.
  • இந்தக் கல்வெட்டு ஆனது, வால் நட்சத்திரத் தோற்றங்களை, எதிர் காலத்தில் அடுத்து வரவிருக்கும் துரதிர்ஷ்டம் மற்றும் சில பேரழிவுகளுடன் தொடர்புபடுத்தும் பாரம்பரிய நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்