இது உலகில் உள்ள அமெரிக்க டாலர் செல்வந்தர்களின் தரவரிசையாகும்.
இந்தத் தரவரிசையின் 10வது ஆண்டு வெளியீடு இதுவாகும்.
முதன்முறையாக உலகில் செல்வம் மிக்க நபராக டெஸ்லாவின் எலோன் மஸ்க் இடம் பிடித்துள்ளார்.
இதில் உலக அளவில் அமேசான்.காம் நிருவனத்தின் தலைவரான ஜெப் பெசோஸ் மற்றும் எல்விஎம்எச் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பெர்னார்டு அர்னால்டு ஆகியோர் முறையே 2வது மற்றும் 3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
நாடுகளின் அடிப்படையில் சீனாவானது 1058 என்ற அளவில் அதிக செல்வந்தர்களுடன் முதல் இடத்திலும் இதற்கு அடுத்து அமெரிக்கா (696), இந்தியா (177), ஜெர்மனி, ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை 100ற்கும் அதிகமான செல்வந்தர்களுடன் அடுத்தடுத்த இடங்களிலும் இடம் பிடித்துள்ளன.
கண்டங்களின் அடிப்படையில், ஆசியாவானது 51% என்ற அளவில் செல்வந்தர்களைக் கொண்டு உள்ளது.
இந்த அறிக்கையின்படி, இந்த உலகமானது 2020 ஆம் ஆண்டில் ஒரு வாரத்தில் 8 செல்வந்தர்களையும் ஒரு ஆண்டில் 421 செல்வந்தர்களையும் சேர்த்துள்ளது, இதன் மூலம் செல்வந்தர்களின் மொத்த எண்ணிக்கை 3288 ஆக உள்ளது.
ஹீருன் உலக செல்வந்தர்கள் பட்டியல் 2021 ஆனது 2402 நிறுவனங்கள் மற்றும் 68 நாடுகளைச் சேர்ந்த 3208 செல்வந்தர்களைத் தரவரிசைப் படுத்தியுள்ளது.