USTTAD (மேம்பாட்டிற்காக பாரம்பரியக் கலைகள்/கைவினைப் பொருட்கள் மீதான திறன்கள் மற்றும் பயிற்சியினை மேம்படுத்துதல் - Upgrading the Skills & Training in Traditional Arts/Crafts for Development) என்ற திட்டத்தின் கீழ் ஹுனார் ஹாத் ஆனது மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப் பட்டது.
USTTAD திட்டமானது சிறுபான்மையினச் சமூகங்களின் பாரம்பரியக் கலைகள் மற்றும் கைவினைகள் ஆகியவற்றின் வளமான பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஹுனார் ஹாத் என்பது சிறுபான்மையினச் சமூகங்களைச் சேர்ந்த கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரியப் பொருள்கள் ஆகியவற்றின் கண்காட்சியாகும்.
சிறுபான்மையினச் சமூகங்களைச் சேர்ந்த கைவினைஞர்களை ஊக்குவித்தல் & ஆதரித்தல் மற்றும் உள்நாட்டு & சர்வதேசச் சந்தைகளை அணுகுவதற்கு அவர்களுக்கு உதவுதல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.