ஹூருன் உலக சுகாதாரத் துறையின் பணக்காரர்கள் பட்டியல் 2022
April 22 , 2022 1178 days 541 0
இந்திய சீரம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், டாக்டர் சைரஸ் S. பூனவல்லா, 2022 ஆம் ஆண்டு ஹூருன் உலக சுகாதாரத் துறையின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இவர் 2022 ஆம் ஆண்டில் சுகாதாரத் துறையில் கோடீஸ்வரர் என்ற ஒரு பெருமையைப் பெற்றார்.
26 பில்லியன் டாலர் (41% அதிகரிப்பு) என்ற அளவிலானச் சொத்து மதிப்புடன் இவர் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
சுகாதாரத் துறையின் பணக்காரர்கள் பட்டியலில் சீனா (34) முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து அமெரிக்கா (16), சுவிட்சர்லாந்து (15), ஜெர்மனி (11), மற்றும் இந்தியா (9) ஆகிய நாடுகளும் உள்ளன.