ஹைட்ரஜன் அழுத்த உயர்த்தி எந்திரத்தின் பாதுகாப்பு மதிப்பீடு
January 27 , 2026 10 hrs 0 min 48 0
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபை - மத்திய சுரங்க மற்றும் எரி பொருள் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CIMFR) இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் அழுத்த உயர்த்தி - வெளியீட்டு எந்திரத்தின் முழு-அமைப்பு பாதுகாப்பு மதிப்பீட்டை நடத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள தேசிய அனல் மின் கழக லிமிடெட்டில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டது.
ஹைட்ரஜன் எரிபொருள் நிலையங்களுக்கு அதிக அழுத்தத்தில் ஹைட்ரஜனை அழுத்தி வழங்குவதற்கு ஹைட்ரஜன் அழுத்த உயர்த்தி எந்திரங்கள் அவசியம் ஆகும்.
இந்த அமைப்பு, மிகவும் வெடிக்கும் தொழில்துறை சூழல்களைக் குறிக்கின்ற எரிவாயு குழு IIC நிலைமைகளின் கீழ் சோதிக்கப்பட்டது.
மிகவும் விரிவான ஆய்வில் தீத்தடுப்பு சாதனங்கள், பாதுகாப்பு ஊடு பிணைப்புகள், அலாரங்கள் மற்றும் அழுத்த வெளியீட்டு அமைப்புகள் ஆகியவை அடங்கும்.