இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் இரயில் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தயாராகும் என்று இரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஹைட்ரஜன் இரயில் ஆனது முதலில் கல்கா மற்றும் சிம்லா போன்ற பாரம்பரிய வழித் தடச் சுற்றுகளில் இயக்கப்படும்.
இந்த இரயில்கள் அதன் பெயரில் குறிப்பிடப் படுவது போல ஹைட்ரஜன் எரிபொருள் எஞ்ஜின்களால் இயங்கும்.
பாரம்பரிய டீசல் எஞ்ஜின்களை விட இவை சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தவை ஆகும்.
ஹைட்ரஜன் எரிபொருள் கலனானது, ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை மாற்றி அமைத்து, இரயிலின் இயங்கிகளை இயக்கச் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
இந்த இரயில்கள் தூய்மையான ஆற்றல் மாற்ற எரிபொருளைப் பயன்படுத்தச் செய்வதால் அவை எந்தவொரு காற்று மாசுபாடுத்திகளையும் வெளியிடுவதில்லை.