ஹைட்ரஜன் எரிபொருளினால் இயங்கும் முதலாவது மித அதிவேக இரயில்
January 11 , 2023 951 days 539 0
நகர்ப்புற இரயில்வே இயக்கத்திற்காக ஆசியாவில் முதல் முறையாக ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இரயில்களை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஹைட்ரஜன் இரயில் ஆனது மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது.
இது எரிபொருள் நிரப்பப்படாமல் 600 கி.மீ. தொலைவு வரை இயங்கக் கூடியது.
இந்த இரயிலில், ஆக்ஸிஜனுடன் ஹைட்ரஜனை இணைத்து ஆற்றலை உருவாக்கி, நீர் மற்றும் நீராவி ஆகியவற்றை மட்டுமே வெளியேற்றுகின்ற எரிபொருள் செல்கள் நிறுவப் பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இரயில்களை அறிமுகப்படுத்திய முதல் நாடு ஜெர்மனியாகும்.