ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இந்தியாவின் முதல் மின்சாரக் கப்பல்
May 6 , 2022 1180 days 636 0
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சகமானது, கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இந்தியாவின் முதல் மின்சாரக் கப்பல்களை வடிவமைத்து உருவாக்க உள்ளது.
ஹைட்ரஜன் மூலம் எரிசக்தியைப் பெறும் எரிபொருள் கலன்கள் ஒரு திறன்மிக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த, சுழிய உமிழ்வு கொண்ட ஒரு நேரடி மின்னோட்ட ஆற்றல் மூலமாகும்.
இது ஏற்கனவே கனரகப் பேருந்து, சரக்குந்து மற்றும் இரயில்களில் பயன்படுத்தப் பட்டது.
மேலும், தற்போது கடல்சார் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டு வருகிறது.