ஹைட்ரஜன் எரிபொருள் கொண்ட மின்கலனால் இயங்கும் இந்தியாவின் முதல் கட்டுமரம் வகையிலான கப்பல்
November 21 , 2022 980 days 389 0
கொச்சி கப்பல் கட்டும் நிறுவனமானது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசி நகரத்தில் இயக்கச் செய்வதற்காக, ஹைட்ரஜன் எரிபொருள் கொண்ட மின்கலனால் இயங்கும் இந்தியாவின் முதல் கட்டுமரம் வகையிலான கப்பலை உருவாக்குவதற்காக இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
இது புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கும், அதன் மூலம் இந்தியாவின் தேசிய நீர்வழிகளில் மேற்கொள்ளப்படும் மாசு உமிழ்வை மேலும் குறைப்பதற்கும் வழி வகுக்கும்.