ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள தனது மேற்கு பொகாரோ பிரிவில் டாடா ஸ்டீல் நிறுவனம் ஹைட்ரோசீடிங் (hydroseeding) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது 50 ஏக்கருக்கும் அதிகமான சுரங்க நிலம், நாற்றங்கால்கள் மற்றும் அதிகப்படியான குப்பைக் கிடங்குகளை உள்ளடக்கியுள்ளது.
ஹைட்ரோசீடிங் என்பது விதைகள், தழைக்கூளம், உரம், பிணைப்பான்கள் மற்றும் மண் வளப்படுத்தும் காரணிகள் அடங்கிய கூழ்மத்தை வெற்று நிலத்தின் மீது தெளிக்கும் ஒரு இயந்திரமயமாக்கப்பட்ட நடவு நுட்பமாகும்.
தழைக்கூளம் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, விதைகளைப் பாதுகாக்கிறது. மேலும் காற்று மற்றும் நீரால் ஏற்படும் மண்ணரிப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இந்த நுட்பமானது சுரங்க நிலங்களை மீட்டெடுத்தல், சரிவுகளை நிலைப்படுத்துதல் மற்றும் சீரழிந்த அதிகப்படியான குப்பைக் கிடங்குகளை மீட்டெடுத்தல் ஆகியவற்றை ஆதரிக்கிறது.
இது அபாயகரமான சரிவுகளில் மனிதர்களால் கைகளைக் கொண்டு நடவு செய்வதைக் குறைப்பதுடன் பெரிய பகுதிகளை விரைவாக மறைக்க உதவுகிறது.