இவை ஜீராசிக் பாறைப்படிவ மாதிரிகளிலிருந்து முதன்முறையாக கண்டெடுக்கப் பட்டுள்ளன.
ஜீராசிக் காலமானது சுமார் 160 முதல் 168 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாகும்.
இது ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் இந்தியப் புவியியல் ஆய்வுக் குழுவினால் கண்டெடுக்கப்பட்டது.
ஹைப்போடோன்ட்ஸ் (Hybodonts) என்பது டிரையாசிக் மற்றும் முற்கால ஜீராசிக் காலத்தின் போது கடல்சார் மற்றும் வண்டல் சூழல்களில் மீன் இனங்களின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்த ஓர் அழிந்து போன சுறா இனமாகும்.
இவை 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரேட்டாசியஸ் (Cretaceous) காலத்தின் முடிவில் அழிந்து போயின.
இந்தக் கண்டுபிடிப்பு மூலம், ஸ்ட்ரோபோடஸ் மரபணு இந்தியத் துணைக் கண்டத்தில் முதல் முறையாக கண்டுபிடிக்கப் படுகின்றது.
ஜப்பான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை அடுத்து ஆசியாவில் இம்மாதிரியான கண்டுபிடிப்பு இது மூன்றாவது முறையே ஆகும்.
இந்தியப் புவியியல் ஆய்வு மையமானது இரயில்வே நிறுவனத்திற்கான நிலக்கரி இருப்புகளைக் கண்டறிய 1851 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த மையம் மத்திய சுரங்கத் துறை அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட ஒரு அலுவலகமாகும்.