ஹோமரின் கிரேக்க மொழி காவியங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு
July 17 , 2023 743 days 415 0
ஹோமர் எழுதிய The Iliad மற்றும் The Odyssey ஆகிய இரண்டு கிரேக்கக் காவியப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புப் பதிப்புகள் சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
சர்வதேச செவ்வியல் படைப்புகளை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து வெளியிடச் செய்வதற்காக முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக இவை வெளியிடப் பட்டுள்ளன.
சர்வதேசத் தமிழாய்வு நிறுவனமானது இந்தத் திட்டத்திற்கானப் பொறுப்பினை ஏற்று உள்ளது.
பேராசிரியர் மருதநாயகம் அவர்கள் The Iliad புத்தகத்தினை உரைநடை வடிவில் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
தலைமைச் செயலகத்தின் முன்னாள் அரசு ஊழியர் பொன் சின்னத்தம்பி முருகேசன் The Odyssey புத்தகத்தினை தமிழ் மொழியில் கவிதை வடிவில் மொழிபெயர்த்துள்ளார்.
முன்னதாக திரு. முருகேசன் ஃபிரிட்ஜோஃப் காப்ரா எழுதிய Tao of Physics, பாலோ கோயல்ஹோ எழுதிய The Alchemist, அலெக்ஸ் ஹேலி எழுதிய Roots மற்றும் The Travels of Marco Polo ஆகிய புத்தகங்களை மொழிபெயர்த்துள்ளார்.