2025 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதியன்று துறவியும் கவிஞருமான கோஸ்வாமி துளசிதாஸின் 528 வது பிறந்த நாளைக் குறிக்கிறது.
உத்தரப் பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் பிறந்த அவருக்கு ராம்போலா துபே என்று பெயரிடப்பட்டது.
அவர் முகலாய பேரரசர் அக்பரின் காலத்தில் வாழ்ந்தவர் ஆவார்.
இராமரின் கதையை மக்களுக்கு அணுகக் கூடியதாக மாற்றுவதற்காக துளசிதாஸ் இராமசரிதமானஸை ஆவாதி மொழியில் எழுதினார்.
அவரது முக்கியப் படைப்புகளில் தோஹாவலி, சாகித்ய ரத்னா அல்லது ரத்னா இராமாயணம், கீதாவலி, கிருஷ்ண கீதாவலி அல்லது கிருஷ்ணாவலி மற்றும் வினய பத்ரிகா ஆகியவை அடங்கும்.