TNPSC Thervupettagam

​​​​கேரள உயர் நீதிமன்றத்தின் பெயர்

September 4 , 2026 9 days 130 0
  • கேரளா, 'கேரளம்' என மாறினாலும், கேரள உயர் நீதிமன்றம் (HCK) என்ற பெயர் அப்படியே நிலைத்திருக்கும்.
  • கேரளாவின் பெயர் 'கேரளம்' என மாற்றப்படுவதால், கேரள உயர் நீதிமன்றத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
  • உயர் நீதிமன்றத்திற்கான பெயர் திருத்தச் செயல்முறையானது, மாநில நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரிலும், மாநில நீதித்துறையின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரும் நாடாளுமன்றத்தால் தொடங்கப்பட வேண்டும்.
  • உயர் நீதிமன்றத்தின் பெயர் மாற்றமானது, நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட வேண்டிய உயர் நீதிமன்றப் பெயர் திருத்தச் சட்டத்தின் மூலமாக மட்டுமே செய்யப்பட முடியும்.
  • 2016-ஆம் ஆண்டில் சென்னை மற்றும் பம்பாய் உயர் நீதிமன்றங்களின் பெயர்களைத் திருத்துவதற்கான முன்மொழிவுகள் இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்தப் பட்ட திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல், பின்னர் காலாவதியாகி விட்டன.
  • மேலும், நீதித்துறையானது மாநில அரசின் ஒரு பகுதியாக இல்லை; அது ஜனநாயகத்தின் மூன்று தூண்களில் ஒன்றாகத் தற்சார்புடையது.
  • மாநில அரசால் அறிமுகப்படுத்தப்படும் பெயர் மாற்றங்கள், உயர் நீதிமன்றத்தின் பெயரையோ அல்லது அதன் தன்மையையோ பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.
  • அத்தகைய எந்தவொரு முடிவும் நாடாளுமன்றத்தால் தொடங்கப்பட வேண்டி இருக்கலாம்.
  • அந்தந்த மாநிலங்களின் பெயர்களில் மாற்றங்கள் ஏற்பட்டபோதிலும், பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் மற்றும் ஒரிசா உயர் நீதிமன்றங்களின் அசல் பெயர்கள் தக்க வைக்கப் பட்ட நிகழ்வுகளையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
  • 1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, திருவிதாங்கூர்-கொச்சி சமஸ்தானத்தையும் மெட்ராஸ் மாநிலத்தின் மலபார் மாவட்டத்தையும் இணைத்து கேரளா மாநிலம் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி எர்ணாகுளத்தை தலைமையிடமாகக் கொண்டு உயர் நீதிமன்ற கேரளா நிறுவப் பட்டது.
  • திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு திருவனந்தபுரத்திலும், கொச்சிக்கு எர்ணாகுளத்திலும் உயர் நீதிமன்றமும், மலபார் மாவட்டம் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிலும் இருந்தன.
  • 1949 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி திருவிதாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருவிதாங்கூர்-கொச்சி உயர் நீதிமன்றம் எர்ணாகுளத்தை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்