2020 ஆம் ஆண்டின் பிம்ஸ்டெக் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி
February 13 , 2020 1968 days 630 0
இரண்டாவது பிம்ஸ்டெக் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி – 2020 ஆனது ஒடிசாவின் புவனேஸ்வரில் தொடங்கப் பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படையானது (National Disaster Response Force - NDRF) இந்திய அரசின் சார்பாக பிம்ஸ்டெக் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி - 2020ஐ ஏற்பாடு செய்து வருகின்றது.
இந்தப் பயிற்சியானது பேரிடர்களினால் சேதமடைந்த பாரம்பரியத் தளங்களை மீட்டெடுப்பதற்கும் வழிவகை செய்கின்றது.
"பூகம்பம் மற்றும் வெள்ளம் அல்லது புயலினால் கடுமையான சேதத்தைச் சந்திக்கும் ஒரு கலாச்சாரப் பாரம்பரியத் தளம்" என்ற கருப்பொருளின் கீழ் இந்தப் பயிற்சியானது நடைபெறுகின்றது.
இந்தியா, மியான்மர், வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.
இந்த ஆண்டுப் பயிற்சியில் தாய்லாந்து மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் பங்கேற்கவில்லை.