‘இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களின் ஒருங்கிணைப்பு’ அறிக்கை
July 27 , 2021 1491 days 566 0
‘இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களின் ஒருங்கிணைப்பு 2021’ என்று தலைப்பிடப்பட்ட ஒரு அறிக்கையினை நிதி ஆயோக் மற்றும் சர்வதேச எரிசக்தி முகைமை ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன.
இந்த அறிக்கையானது கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய அரசுகளுடன் மூன்று மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட கருத்தரங்குகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளம் நிறைந்த இந்த மாநிலங்களால் எதிர்கொள்ளப்படும் ஆற்றல் மாற்ற சவால்களை புரிந்து கொள்வதற்காக இந்த அறிக்கையானது தயார் செய்யப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் ஆற்றல் அமைப்பானது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை ஆக்கப்பூர்வமாக ஒருங்கிணைக்க வல்லது (2022 ஆம் ஆண்டுக்குள் 175GW மற்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் 450 GW).