‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் கீழான நிதியுதவி அதிகரிப்பு
November 10 , 2024 250 days 773 0
தமிழக அரசானது, ‘இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48’ திட்டத்தின் கீழ் வழங்கப் படும் நிதியுதவியை 1 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக விரைவில் உயர்த்த உள்ளது.
இது சாலை விபத்துக்களில் காயம்பட்டவர்களுக்கு முதல் 48 மணிநேரத்திற்கு வழங்கப் படும் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்கும் திட்டமாகும்.
இதுவரை மூன்று இலட்சம் பயனாளிகளுக்கு இத்திட்டம் பயனளித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட ‘இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48’ திட்டத்திற்காக அரசாங்கம் இதுவரையில் 261.46 கோடி ரூபாய் செலவிட்டு உள்ளது.