TNPSC Thervupettagam

‘சகுந்தலா’ செயற்கைக்கோள்

April 19 , 2022 1203 days 521 0
  • பெங்களூர் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு விண்வெளித் தொழில்நுட்பப் புத்தாக்க நிறுவனமான பிக்ஸ்செல் நிறுவனம் தனது முதலாவது முழு அளவிலான வணிகச் செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக அறிவித்து உள்ளது.
  • இது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ரைட்ஷேர் ஏவுத் திட்டத்தில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ள 36-செயற்கைக்கோள் தொகுப்பின் ஒரு பகுதியாக இருக்கும்.
  • 'சகுந்தலா' செயற்கைக் கோளானது விண்வெளிக்கு இதுவரையில் விண்ணில் செலுத்தப் பட்ட உயர்-தெளிவுத்திறன் கொண்ட அதி நிறமாலை வணிக ஒளிப்படக் கருவியில் ஒன்றை ஏந்திச் செல்கிறது,
  • இது கிரகத்திற்கான 24x7 மணி நேர சுகாதாரக் கண்காணிப்பு அமைப்பை  உருவாக்கச் செய்வதற்கான ஒரு முயற்சியில் இந்த நிறுவனத்தை மேலும் ஒரு படி முன்னேற்றிச் செல்கிறது.
  • 15 கிலோவுக்கும் குறைவான எடை கொண்ட சகுந்தலா செயற்கைக் கோளானது, புலப்படக்கூடியது முதல் அகச்சிவப்பு நிறமாலை வரையிலான 150க்கும் மேற்பட்ட வண்ணப் பட்டைகளில் சுற்றுப் பாதைச் சார்ந்த படங்களைப் படம்பிடிக்கும் திறன் கொண்டதாகும்.
  • இது விண்வெளித் துறையில் இந்தியாவின் தனியார் நிறுவனங்களின் வளர்ந்து வரும் பங்கைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்