இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது புதுடெல்லியின் 4 காவல் நிலையங்களை ‘சரியான உணவை உண்ணும்’ வளாகங்களாக அறிவித்து சான்றளித்துள்ளது.
‘சேஜார்மந்த் டெல்லி திட்டத்தின்’ கீழ் இவற்றிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.
சேஜார்மந்த் டெல்லி என்ற திட்டமானது “சரியான உணவை உண்ணுதல்” திட்டத்தின் ஓர் அங்கமாகத் தொடங்கப்பட்டது.
“சரியான உணவை உண்ணுதல்” என்ற ஒரு முன்னெடுப்பானது இந்தியக் குடிமக்கள் பாதுகாப்பான மற்றும் ஊட்டச்சத்துமிக்க உணவினைப் பெறுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது.