‘சிறு வைப்புத் தொகை சார்’ கணக்குச் சரிபார்ப்பு முறை
November 6 , 2023 615 days 456 0
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) ஆனது, ‘சிறு வைப்புத் தொகை சார்’ கணக்குச் சரிபார்ப்பினை மேற்கொண்டுள்ளது.
இது தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) சந்தாதாரர்கள் தங்களது பணத்தை திரும்பப் பெறுவதற்காக, சரியான நேரத்தில் பணப் பரிமாற்றம் மேற்கொள்வதற்கு என்று கட்டாயமான ஒன்றாகும்.
'சிறு வைப்புத் தொகை சார்' கணக்குச் சரிபார்ப்பு செயல்முறை மூலம், மத்தியப் பதிவு பராமரிப்பு முகமைகள் (CRA) சேமிப்பு வங்கிக் கணக்கின் செயல்பாட்டு நிலையைச் சரிபார்க்க இயலும்.
இந்த முறையில் வங்கிக் கணக்கு எண்ணில் உள்ள பெயர் ஆனது, PRAN (நிரந்தர ஓய்வூதியக் கணக்கு எண்) எண்ணில் உள்ள பெயருடன் அல்லது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் உள்ள பெயருடன் பொருத்திப் பார்த்து சரி பார்க்கப்படுகிறது.