TNPSC Thervupettagam

‘திரிசக்தி பிரஹார்’ - கூட்டு இராணுவப் பயிற்சி

March 5 , 2023 901 days 413 0
  • இந்திய இராணுவமானது மேற்கு வங்காளத்தின் வடக்குப் பகுதியில் திரிசக்தி பிரஹார் எனப்படும் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியினை மேற்கொண்டது.
  • இராணுவம், இந்திய விமானப்படை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை ஆகியவற்றினை உள்ளடக்கிய பிணைய, ஒருங்கிணைந்தச் சூழலில் சமீபத்திய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி, பாதுகாப்புப் படைகளின் போர் தயார் நிலை குறித்து பயிற்சி செய்வதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
  • இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக, மேற்கு வங்காளத்தின் வடக்குப் பகுதியின் பல்வேறு இடங்களில் விரைவான படை திரட்டல் மற்றும் நிலைநிறுத்தல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • இப்பகுதியானது இந்தியாவிற்கு உத்தி சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
  • இந்த 20 முதல் 30 கிமீ அகலம் கொண்ட பாதையான குறுகிய சிலிகுரி பகுதி தெற்கில் வங்காளதேசத்தையும் வடக்கே பூடானையும் ஒட்டி அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்