ஆந்திரப் பிரதேச மாநில அரசானது 2025 ஆம் ஆண்டு நவம்பர் 24 முதல் 29 ஆம் தேதி வரை ‘ரைட்டன்னா - மீ கோசம்’ என்ற ஒரு வார கால விவசாயி விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்துகிறது.
இந்த இயக்கத்தில், நவீனச் சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளுக்குக் கல்வி கற்பிப்பதற்காகச் சட்டமன்ற உறுப்பினர்கள் விவசாயிகளின் வீடுகளுக்கு வருகை தரும் நிகழ்வு அடங்கும்.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் 03 ஆம் தேதியன்று ரிது சேவா கேந்திராக்களில் (விவசாயி சேவை மையங்கள்) பயிலரங்கங்கள் நடத்தப்படும்.
இந்தத் திட்டம் நீர்ப் பாதுகாப்பு, தேவை அடிப்படையிலான சாகுபடி, வேளாண் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பு, உணவு பதப்படுத்துதல் மற்றும் தொடர்ச்சியான அரசு ஆதரவு ஆகிய ஐந்து அம்ச வேளாண் உத்தியால் வழி நடத்தப் படுகிறது.