சமூக அடிப்படையிலான வனவிலங்குப் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக பலமு புலிகள் சரணாலயம் ‘வன்ஜீவி தீதி’ எனும் முன்முயற்சியைத் தொடங்கியது.
இந்த முன்முயற்சி 17 கிராமங்களில் இருந்து தலா 18 படித்த பெண்கள் வன தூதர்களாக செயல்படவும், வேட்டையாடுதல் மற்றும் காடழிப்புக்கு எதிராக விழிப்பு உணர்வைப் பரப்பவும் அதிகாரம் அளிக்கிறது.
இது ஜார்க்கண்டின் காரு மலைத்தொடரில் பிப்ரவரி 17, 2026 அன்று தொடங்கப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதந்தோறும் ₹3,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
பலமு புலிகள் சரணாலயம், வங்காளப் புலிகளைப் பாதுகாப்பதற்காக 1973 ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.