TNPSC Thervupettagam

‘வெற்றி நிச்சயம்’ திட்டம்

July 4 , 2025 14 hrs 0 min 40 0
  • சென்னையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் 3 ஆண்டு கால நிறைவின் மீதான ஒரு கொண்டாட்டத்துடன் சேர்த்துத் தமிழக முதல்வர் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
  • இந்தத் திட்டமானது, பள்ளி/கல்லூரி படிப்பினை இடை நிறுத்திய 18 முதல் 35 வயது உடைய இளையோர்களுக்கு இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கும்.
  • தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட மையங்கள் மூலம் 38 துறைகளில் 165 படிப்புகளில் பயிற்சி வழங்கப்படுகிறது.
  • பயிற்சி செலவினங்களை அரசாங்கமே வழங்கும் மற்றும் தகுதியான வேலைவாய்ப்பு ஆர்வலர்களுக்கு 12,000 ரூபாய் ஊக்கத் தொகையையும் அரசு வழங்கும்.
  • தொலைதூர இடங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு இலவச விடுதி மற்றும் உணவு வசதி வழங்கப் படும்.
  • இது பல்வேறு விளிம்பு நிலைச் சமூகங்கள் – பழங்குடியின இளையோர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறுபான்மையினர், இலங்கைத் தமிழர்கள் மற்றும் பல பிரிவினர் மீது கவனம் செலுத்துகிறது.
  • சர்வதேச வேலை வாய்ப்புகளுக்கு உதவுவதற்காக வெளிநாட்டு மொழிகளில் (எ.கா., ஜெர்மன்) சிறப்புப் பயிற்சி வழங்கப்படும்.
  • "ஸ்கில் வாலட்" எனும் புதிய செயலியானது மாணவர்கள் தங்களுக்கான படிப்புகளைத் தேர்ந்தெடுத்து வேலைகளுக்கு எளிதாக விண்ணப்பிக்க உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்