TNPSC Thervupettagam

‘Green to Gold’ முன்னெடுப்பு

December 31 , 2025 3 days 16 0
  • கிராமப்புறப் பொருளாதாரத்தையும் நிலையான மேம்பாட்டினையும் மேம்படுத்துவதற்காக ‘Green to Gold’ முன்னெடுப்பின் கீழ் இமாச்சலப் பிரதேசம் ஒழுங்குபடுத்தப்பட்ட தொழில்துறை கஞ்சா பயிர் சாகுபடியைத் தொடங்கியுள்ளது.
  • இந்த முன்னெடுப்பு என்பது 2027 ஆம் ஆண்டிற்குள் தன்னிறைவு பெற்ற இமாச்சலப் பிரதேசத்தை உருவாக்குவதையும், இந்தியாவின் உயிரிப் பொருளாதாரத்தில் அந்த மாநிலத்தை முன்னணியில் நிலை நிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதன் டெட்ராஹைட்ரோகன்னாபினோல் (THC) உள்ளடக்கம் 0.3% ஆகக் குறைக்கப் பட்டு, இது அதனைப் போதைப்பொருள் அல்லாததாகவும், போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்குப் பொருத்தமற்றதாகவும் ஆக்குகிறது.
  • கஞ்சா பயன்பாடுகளில் ஜவுளி, உயிரி நெகிழிகள், மருத்துவம், அழகுசாதனப் பொருட்கள், உயிரி எரிபொருள் மற்றும் குறைந்த கார்பன், சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருளான கஞ்சா கிரீட் ஆகியவை அடங்கும்.
  • கஞ்சா செடி பருவநிலைக்கு தகவமைப்புத் திறன் கொண்டது என்பதோடு மேலும் அதன் சாகுபடிக்குப் பருத்தியை விட 50% குறைவான நீர் தேவைப்படுகிறது என்ற நிலையில் மேலும் சிறிய அளவிலான மற்றும் தரமிழந்த மண்ணில் நன்றாக வளரும் இது இமாச்சலத்தின் மலைப் பகுதிகளுக்கு ஏற்றதாக அமைகிறது.
  • இந்த முன்னெடுப்பு ஆண்டுதோறும் 1000 முதல் 2000 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டும் என்றும், விவசாயிகள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற இளையோர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கும் என்றும், இது இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்